Wednesday, November 21, 2018

காத்திருந்த கண்கள் படத்தில் உள்ள காற்று வந்தால் தலை சாயும் …நாணல்  என்ற   பாடலில் ஒவ்வொரு வரியின் கடைசி வார்த்தையும் 
"நேர் நிரை அல்லது நிரை நிரை" 
என்ற ஈரசைச்சீர்களுடன் அமைந்துள்ளது. கண்ணதாசன் கவிதையின் அழகை இதில் ரசிக்கவும் .
இதோ அந்த பாடல் 
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்

காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
ஆற்றினிலே கரைபுரளும்...வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …உள்ளம்

ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் …கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் …வேதம்
இருவராக படிக்க சொல்லும் …காதல்

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

மழை வரும் முன் வானை மூடும் …மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்மோகம்
மழை வரும் முன் வானை மூடும்மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்மோகம்


ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்ட தேதி வரும்

உயிர் கலந்து சேர்ந்து விடும்மானம்


பாடி வரும் பருவ முகம்

பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன்… நானும் 
நானும் 
நானும்

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே …மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பெண்ணிருந்தால் தோற்று விடும் …பொன்னும்
உள்ளம்

துள்ளும் 

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

அன்புடன் 
ஜெ.சந்தானகிருஷ்ணன் 
21.11.2018

Thursday, October 4, 2018

"இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்" 
என்ற இந்த பாட்டு 
கண்ணதாசன் இயற்றி  , 
விஸ்வநாதன் - ராமமூர்த்தி  இசை அமைத்து
ஜானகியும் P.B.ஸ்ரீனிவாசும் பாடி ,
 விஜயகுமாரியும் முத்துராமனும் வாயசைத்து நடித்து  
1962 ல்  வெளிவந்த 
 போலீஸ்காரன் மகள்  
திரைப்படத்தில் உள்ளதுபொதுவாக 100க்கு  99 சதவீத திரைப்படப்பாடல்கள் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடினால் அது 
 காதலன்-காதலி 
அல்லது
 கணவன்- மனைவி 
என்று தான் இருக்கும்
ஆனால் இந்த பாடல்
 அண்ணன்-தங்கை
 பாடுவதாக அமைந்துள்ளது .
அண்ணன்-முத்துராமன்
தங்கை-விஜயகுமாரி  
திரைப்படத்தைப்பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டோமானால் தங்கை 
"நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்  

அவள் விடிந்தபின் துயில்கின்றாள்

என்னும் வேதனை கூறாயோ"

என்று  பாடி முடித்தவுடன் அண்ணன்  
"இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் 
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா" 
என்று தொடர்ந்து பாடஆரம்பித்து பிறகு இசைக்கோர்வை தொடர அதன் பின் 
"தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ"

என்று பாடுவதாக முடியும். அண்ணன் தான் பாடுகிறான் என்று அவளுக்கு ஆரம்பத்தில் தெரியாது. தன் காதலன் பாலாஜி தான் பாடுவதாக நினைத்து தேடி வருவாள் ஆனால் அவள் அண்ணனை பார்த்தவுடன் வெட்கத்துடன் ஓடி ஒளிவாள்.இது வீடியோ காட்சியில் தெரியும். 
ஆனால் நாம் பாடலை மட்டும் கேட்டால் 
 "இந்த அண்ணனை மறந்து விட்டாள்"
 என்ற வார்த்தைகள் வரும் வரை நமக்கும்  யார் பாடுகிறார்கள் என்பது தெரியாது. இயக்குநர் ஸ்ரீதரால் இந்த பாடல் படமாக்கப்பட்டவிதம் மிகவும் அருமை. நீங்களும் ஒரு முறை கண்டு ரசியுங்கள். 

இதோ அந்த அருமையான பாடலின் வரிகள்:   

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்



வண்ண மலர்களின் அரும்பாவாள்

உன் மனதுக்குள் கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்  

-----------------------------------------------------------------------
இதோ அந்த பாடலின் வீடியோ: 
அன்புடன் 
ஜெ.சந்தானகிருஷ்ணன் 
4.10.2018

Monday, October 1, 2018

'கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி' என்ற இந்த பாட்டு வாலி இயற்றி,  பார்த்தசாரதி  இசை அமைத்து, ஜானகியும் ஜேசுதாசும் பாடி,  மணிமாலாவும் நாகேஷும் நடித்து,  1970 ல்  வெளிவந்த  கல்யாண ஊர்வலம் படத்தில் உள்ளது. பொதுவாக 100க்கு  99 சதவீத திரைப்படப்பாடல்கள் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடினால் அது  காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி என்று தான் இருக்கும். மிக அரிதாக அண்ணன் -தங்கை , அக்கா - தம்பி என்று இருக்கும். ஆனால் இந்த பாடல் சித்தப்பா -அண்ணன் மகள் என்று ஒரு புது  காம்பினேஷனில் அமைந்தது. இந்த திரைப்படத்தைப்பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டோமானால் ஆண் பாடும்போது 'என் அண்ணன் மகள்' என்ற வார்த்தைகள் வரும் வரை பாடுவது மணிமாலாவின் சித்தப்பா நாகேஷ் என்பது தெரியாது. இந்த பாடலை படமாக்கியவிதத்திலும் மணிமாலாவின் முகபாவம் ஆண் குரலில் 'என் அண்ணன் மகள்' என்ற வார்த்தைகள் வரும் வரை கேள்விக்குறியோடு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது ஒன்று. 
இதோ பாடலின் வரிகள்.
​இதோ அந்த பாடலின்  வீடியோ.
அன்புடன் 
ஜெ. சந்தானகிருஷ்ணன் 
1.10.2018 


Thursday, June 15, 2017

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?"
என்ற ராமச்சந்திர கவிராயரின் பாடலை மனதில் கொண்டு நமது கவிஞர் கண்ணதாசன் 1963ம் வருடம் பாவ மன்னிப்பு படத்திற்கு எழுதிய  
"அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான் எப்படிச்சொல்வேனடி" 

என்ற பாடல் என்று கேட்டாலும் செவிக்கு இனிமையாக இருக்கும். கீழே அந்த பாடலை அது பிறந்த விதத்தை திரு.MSV அவர்களே  விவரிப்பதைக் கேட்கும் பொழுது அந்த காலத்தில் எவ்வளவு சிரத்தையுடன் திரையில் பணியாற்றி இருக்கிறார்களென்று ஆச்சரியப்பட வைக்கிறது. 


இப்படிக்கு 
சந்தானகிருஷ்ணன் 
(JS)

   

Monday, February 27, 2017

​தரிசனம் என்ற படத்தில் TMS ம் , L.R.ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய ஓரூ டூயட்.  கண்ணதாசன் எழுதி சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்தது. இது ஒரு வித்தியாசமான பாடல். ஏனென்றால் பொதுவாக ஒரு ஆண் தான் பெண்ணை காதல்  விளையாட்டுக்கு அழைப்பான். பெண் ஒதுங்கிப்போவாள். ஆனால் இந்த பாடலில் பெண் காதல் விளையாட்டுக்கு ஆணை  அழைக்கிறாள் . ஆண்  ஓதுங்கி ஒதுங்கிப்போகிறான் . சற்று கூர்ந்து கவனித்தால் இது நன்றாகத் தெரியும். சொல்லப்படும் செய்தி சற்று விரசமாக இருந்தாலும்  கண்ணதாசனின் கற்பனையில் உதித்த பாடலின்  வரிகள்  மிகவும் பொருத்தமாக அமைந்து நம்மை சிந்திக்க வைக்கிறது. கீழே உள்ள பாடலை சொடுக்கவும். நன்றி.
ஜெ எஸ் 




Sunday, February 26, 2017

இசையமைப்பாளர் வேதாவின் காலத்தால் அழியாத பாடல்

இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.ஏனெனில் இதில் இசையும் பாடலும் மிகவும் அருமை. அத்துடன் இதில் கவனிக்க வேண்டியது மற்றொன்று  உண்டு. அதாவது ஜெய்சங்கரும் விஜயலக்ஷ்மியும் மாறி மாறி பல்லவி பாடியதும் கதாநாயகன் சரணம் பாடும்போது  சிறிது நக்கலாக சந்தேகப்படுவதைப்போல் பாட அதற்கு கதாநாயகி மிகவும் அழகாக மிகவும் சாதுர்யமான பொருத்தமான பதிலைத்தருவாள். இதெல்லாம் காலத்தால் அழியாத பாடல்களாகும். 
ஜெ எஸ்  
JS