Friday, March 26, 2021

 இன்று நான் சொல்லப்போவது என் அண்ணன்  படத்தில் வரும்  "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடல். 

இந்த பாடலில் மூன்றாம் சரணத்தில் உள்ள கடைசி வரியை  "வெற்றி உன்னைத்  தேடி வரும்  வாளை  நிறுத்து " என்று கண்ணதாசன் எழுதியிருந்தார்.  அது அப்படியே படமாக்கப்பட்டது .ஆனால் சென்சாரில்  அதை  மாற்றச்சொன்னதால்  "நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து" என்று  கண்ணதாசன் மாற்றி எழுதிக் கொடுத்தார். இதில் முக்கியமானது என்னவென்றால்  படம் முடிந்த பிறகு பாட்டில் மட்டும் தான் மாற்ற முடிந்தது. உதட்டசைவு  "வெற்றி உன்னைத்  தேடி வரும்  வாளை  நிறுத்து " என்று தான் காட்டும் . கீழே கொடுத்துள்ள Link ஐ  சொடுக்கி பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவும் .

 LINK: https://www.youtube.com/watch?v=7bYkrfGignQ



பாடல் வரிகள் 
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .




Monday, June 22, 2020

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - பாடல் ஓர் அலசல்



பொருள் இல்லாத ஒரே சொல் இருமுறை அடுக்கி இரட்டைச்சொற்களாக வருவது இரட்டைக்கிளவி. 

சொற்கள் தனித்தனியே நின்று பிரித்தால் பொருள் தந்து இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்கு தொடர் . இது உங்களுக்கு தெரியும். இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் "தர்மம் தலை காக்கும்" என்ற படத்தில்  "தொட்டு விடத்  தொட்டு விடத்  தொடரும்" என்ற பாடலில்  எல்லா வரிகளிலும் அடுக்குத்தொடர் வார்த்தைகளை கோர்த்து மிக அழகாக கண்ணதாசன் எழுதியுள்ள பாடலை கீழே கொடுத்துள்ளேன். படித்து ரசிக்கவும்.  

பின் குறிப்பு:  ஆறாவது வரியில் மட்டும்  பாட்டின் பொருள் கெடாமல் இருக்க "முன்னும் பின்னும்" என்று வார்த்தைகள் மாறி வரும்.
 
 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்-
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்-
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
6⇾  கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


தொட்டுவிட தொட்டுவிட தொடரும் முழு ...
இந்த அருமையான பாடலை கீழேயுள்ள link ஐ சொடுக்கி ரசிக்கவும்  


நன்றி 
ஜெ எஸ் 

Monday, January 6, 2020

நண்பர்களுக்கு 
 2020 ன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.     

சந்தானகிருஷ்ணன் 



Wednesday, November 21, 2018

காத்திருந்த கண்கள் படத்தில் உள்ள காற்று வந்தால் தலை சாயும் …நாணல்  என்ற   பாடலில் ஒவ்வொரு வரியின் கடைசி வார்த்தையும் 
"நேர் நிரை அல்லது நிரை நிரை" 
என்ற ஈரசைச்சீர்களுடன் அமைந்துள்ளது. கண்ணதாசன் கவிதையின் அழகை இதில் ரசிக்கவும் .
இதோ அந்த பாடல் 
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்

காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
ஆற்றினிலே கரைபுரளும்...வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …உள்ளம்

ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் …கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் …வேதம்
இருவராக படிக்க சொல்லும் …காதல்

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

மழை வரும் முன் வானை மூடும் …மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்மோகம்
மழை வரும் முன் வானை மூடும்மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்மோகம்


ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்ட தேதி வரும்

உயிர் கலந்து சேர்ந்து விடும்மானம்


பாடி வரும் பருவ முகம்

பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன்… நானும் 
நானும் 
நானும்

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே …மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பெண்ணிருந்தால் தோற்று விடும் …பொன்னும்
உள்ளம்

துள்ளும் 

காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்

அன்புடன் 
ஜெ.சந்தானகிருஷ்ணன் 
21.11.2018