'கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி' என்ற இந்த பாட்டு வாலி இயற்றி, பார்த்தசாரதி இசை அமைத்து, ஜானகியும் ஜேசுதாசும் பாடி, மணிமாலாவும் நாகேஷும் நடித்து, 1970 ல் வெளிவந்த கல்யாண ஊர்வலம் படத்தில் உள்ளது. பொதுவாக 100க்கு 99 சதவீத திரைப்படப்பாடல்கள் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடினால் அது காதலன்-காதலி அல்லது கணவன்-மனைவி என்று தான் இருக்கும். மிக அரிதாக அண்ணன் -தங்கை , அக்கா - தம்பி என்று இருக்கும். ஆனால் இந்த பாடல் சித்தப்பா -அண்ணன் மகள் என்று ஒரு புது காம்பினேஷனில் அமைந்தது. இந்த திரைப்படத்தைப்பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டோமானால் ஆண் பாடும்போது 'என் அண்ணன் மகள்' என்ற வார்த்தைகள் வரும் வரை பாடுவது மணிமாலாவின் சித்தப்பா நாகேஷ் என்பது தெரியாது. இந்த பாடலை படமாக்கியவிதத்திலும் மணிமாலாவின் முகபாவம் ஆண் குரலில் 'என் அண்ணன் மகள்' என்ற வார்த்தைகள் வரும் வரை கேள்விக்குறியோடு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது ஒன்று.
இதோ பாடலின் வரிகள்.
இதோ அந்த பாடலின் வீடியோ.
அன்புடன்
ஜெ. சந்தானகிருஷ்ணன்
1.10.2018